மெரினாவில் படகு சவாரி: சுற்றுலாப் பிரியர்களுக்கு மகிழ்ச்சிதரும் அறிவிப்புகள்

சென்னை மெரினா கடற்கரையில் பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது.
மெரினாவில் படகு சவாரி: சுற்றுலாப் பிரியர்களுக்கு மகிழ்ச்சிதரும் அறிவிப்புகள்
மெரினாவில் படகு சவாரி: சுற்றுலாப் பிரியர்களுக்கு மகிழ்ச்சிதரும் அறிவிப்புகள்


சென்னை மெரினா கடற்கரையில் பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் சுற்றுலாத் துறை சார்பில் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், முக்கிய அறிவிப்பாக, 

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டப்படும்.

கன்னியாகுமரியல் அமைந்துள்ள 133 அடி திருவள்ளுவர் சிலையை மேலும் அழகூட்டும் வகையில் சுற்றுலாப் பயணிகள் இரவிலும் கண்டு மகிழ லேசர் தொழில்நுட்ப உதவியுடன் முப்பரிமாண ஒளியூட்டம் அமைக்கப்படும்.
சென்னை மெரினா கடற்கரையில் இராயல் மெட்ராஸ் யாட் கிளப் உடன் இணைந்து பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும்.

உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இராயல் மெட்ராஸ் யாட் கிளப் இணைந்து காற்றின் திசையில் பயணிக்கும் படகு, மோட்டார் படகு, அதிவிரைவு படகுகள் மற்றும் பொழுதுபோக்கு படகுச் சவாரி தொடங்கப்படும்.

கடற்கரைகளுக்கு நீலக் கொடி அங்கீகாரத்தினைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இயற்கை அழகினை கண்டு ரசிக்கவும், புதிய பயண அனுபவங்களை சுற்றுலாப் பயணிகள் பெறவும், சுற்றுச் சூழலுக்கு உகந்த கேபிள் கார் வசதி தமிழகத்தில் உள்ள முக்கிய மலைவாசஸ்தலங்கள் மற்றும் ஆன்மிகத் தலங்களை இணைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

முதலியார்குப்பம் படகு குழாம் மற்றும் அருகில் உள்ள தீவுப் பகுதியில் நீர் விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள், தேநீர் விடுதி போன்ற வசதிகளுடன் தங்கும் வசதி கொண்ட படகு இல்லம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகைதரும் நகரங்களான ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரிக்கிடையே சொகுசு கப்பல் சேவை மற்றும் படகு சேவை தொடங்குவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ஏலகிரியில் சாகச சுற்றுலா பல்வேறு பிரிவுகளுடன் மேம்படுத்தப்படும்.

ஒகேனக்கல்லில் நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு ரசிக்க பார்வையாளர் மாடம் அமைக்கப்படும்.

முட்டுக்காட்டில் உள்ள படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் படகில் பயணித்து இயற்கை அழகினை ரசிப்பதற்காக தமிழகத்தில் முதல் முறையாக மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com