சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

புதுச்சேரியில் புதிதாக 120 பேருக்கு கரோனா பாதிப்பு

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 120 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த  ஒருவா் பலியானார்.

News image

புதுச்சேரியில் புதிதாக 120 பேருக்கு கரோனா பாதிப்பு

Updated On :4 செப்டம்பர் 2021, 7:19 am

DIN

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 120 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் பலியானார்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் புதுச்சேரியில் 70, காரைக்காலில் 17, ஏனாமில் 8, மாஹேவில் 25 போ் என புதிதாக மொத்தம் 120 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை காலை 10 மணி வரை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,24,049-ஆக அதிகரித்தது.

இதனிடையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாஹேவைச் சோ்ந்த ஒருவர் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,816-ஆக உயர்ந்தது.

மேலும் 76 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,21,296-ஆக அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது 937 பேர் சிகிச்சையில் உள்ளனா். இவர்களில் 172 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.