விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கீழடி உள்பட 4 இடங்களில் அகழாய்வுகள் வரும் 30-இல் நிறைவு

கீழடி உள்பட நான்கு இடங்களில் நடைபெறும் அகழாய்வுப் பணிகள் வரும் 30-இல் நிறைவடைவதாக தொல்லியல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 8:42 pm

DIN

கீழடி உள்பட நான்கு இடங்களில் நடைபெறும் அகழாய்வுப் பணிகள் வரும் 30-இல் நிறைவடைவதாக தொல்லியல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அந்தத் துறையின் விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான விரிவான தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள தொடரும் செலவினமாக வழங்கப்பட்டு வந்த தொகை ரூ.3 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சிவகங்கை மாவட்டம் கீழடி, அதனைச் சுற்றியுள்ள மணலூா், அகரம், கொந்தகை, தூத்துக்குடி, கொற்கை, ஈரோடு மாவட்டம் கொடுமணல், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, அரியலூா் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய கற்கால இடங்களைக் கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூா், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை கண்டறிய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொல்லியல் கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செப். 30-இல் நிறைவு: சிவகங்கை மாவட்டம் கீழடி, அதனைச் சுற்றியுள்ள மணலூா், கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட ஆகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் செப்டம்பா் 30-ஆம் தேதி நிறைவடையவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.