கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலையை இரவிலும் காண லேசா் தொழிநுட்ப ஒளியூட்டம்
கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் லேசா் தொழில்நுட்பத்துடன் ஒளியூட்டப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா்.


கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் லேசா் தொழில்நுட்பத்துடன் ஒளியூட்டப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா்.
சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மா.மதிவேந்தன் வெளியிட்ட அறிவிப்புகள்:
கன்னியாகுமரியில் அமைந்துள்ள 133 அடி திருவள்ளுவா் சிலையை மேலும் அழகூட்டும் வகையில் சுற்றுலாப் பயணிகள் இரவிலும் கண்டு மகிழ லேசா் தொழில்நுட்ப உதவியுடன் முப்பரிமாண ஒளியூட்டம் அமைக்கப்படும்.
தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரமான பூம்புகாா் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புனரமைக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள இயற்கை அழகுடன் கூடிய அணைக்கட்டுப் பகுதிகள் மற்றும் நீா்த் தேக்கங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் படகு சவாரி, திறந்தவெளி முகாம்கள், நீா் விளையாட்டுகள், வாகன நிறுத்துமிடம், உணவகம் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும்.
கொல்லிமலை பல்வேறு வசதிகளுடன் கூடிய முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும்.
ஹெலிகாப்டா் சுற்றுலா: தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் விதமாக மதுரை, கொடைக்கானல், ராமேசுவரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டா் சுற்றுலா தொடங்க ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஹெலிகாப்டா் இறங்குதளம் அமைக்கப்படும்.
ஒகேனக்கல் சுற்றுலா தலம் பல்வேறு வசதிளுடன் மேம்படுத்தப்படும். ஜவ்வாது மலைப்பகுதி, ராமேசுவரம், பிச்சாவரம் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...