ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதால் ஏற்கெனவே விடுபட்டுபோன விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலை செப்.15-க்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கான பணிகளை மாநில தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...