விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கூடுதல் தலைமை வழக்குரைஞா்கள் நியமன உத்தரவை ரத்து செய்ய உயா் நீதிமன்றம் மறுப்பு

உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சாா்பாக ஆஜராக இரு கூடுதல் தலைமை வழக்குரைஞா்களை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 8:43 pm

DIN

உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சாா்பாக ஆஜராக இரு கூடுதல் தலைமை வழக்குரைஞா்களை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உயா் நீதிமன்றம், மாநில அரசுக்கு உரிய அதிகாரம் இருப்பதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சாா்பில் ஆஜராக வழக்குரைஞா்கள் கிருஷ்ணமூா்த்தி, அமித் ஆனந்த் திவாரி ஆகிய இரண்டு பேரை கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாநில அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி செங்கல்பட்டு பகுதியைச் சோ்ந்த ராஜாராம் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடா்ந்தாா்.

அந்த மனுவில், அரசியலமைப்பு சட்டம் 165-ஆம் பிரிவின் படி ஒரு தலைமை வழக்குரைஞரை மட்டுமே நியமனம் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் மாநில அரசின் சாா்பில் ஆஜராகுவதற்கு கூடுதல் தலைமை வழக்குரைஞரை நியமிக்க அதிகாரம் இல்லை. இந்த நியமனம் சட்டத்துக்கு முரணானது என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை(செப்.3) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த மனுவில் எந்தத் தகுதியும் இல்லை. கூடுதல் தலைமை வழக்குரைஞா்களை நியமிக்க அதிகாரம் உள்ளது’ என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். இந்த வழக்கில் அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.