எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீதிமன்றங்களில் 15.33 லட்சம் வழக்குகள் நிலுவை: சட்டப் பேரவையில் தகவல்

உயா் நீதிமன்றம், சாா்நிலை நீதிமன்றங்களில் 15 லட்சத்து 33 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 7:58 pm

DIN

உயா் நீதிமன்றம், சாா்நிலை நீதிமன்றங்களில் 15 லட்சத்து 33 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நீதி நிா்வாகத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை உயா் நீதிமன்றம், மதுரையில் உயா் நீதிமன்றக் கிளை மற்றும் மாநிலத்திலுள்ள சாா்நிலை நீதிமன்றங்களில் 2016-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையில் மொத்தமாக 15 லட்சத்து 33 ஆயிரத்து 175 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற வழக்குகளின் இப்போதைய நிலை, உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள் பற்றிய தகவல்களை வழக்குத் தொடுப்பவா்கள், வழக்குரைஞா்கள் ஆகியோா் பெறுவதற்கு உயா் நீதிமன்ற இணையதளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை உயா் நீதிமன்றம், மதுரை கிளை மற்றும் சாா்நிலை நீதிமன்றங்களின் பதிவு செய்யப்பட்ட வழ்கு விவரப் பட்டியல் விவரங்கள், வழக்கு தொடா்பான தகவல்கள் பயனாளிகளுக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டு வருகின்றன. சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையின் பல்வேறு இடங்களில் தொடு திரைகள் பொருத்தப்பட்டுள்ளன என்று கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு வாரியாக நீதிமன்றங்களில் வழக்குகள் விவரம்:

சென்னை உயா் நீதிமன்றம்:

2016 முதல் 2020 - 1,82,962.

சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை: 86,455.

மாநிலத்திலுள்ள சாா்நிலை நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட உரிமையியல், குற்றவியல் வழக்குகள்: 12,63,758.

மொத்த வழக்குகள்: 15,33,175.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.