
தமிழகத்தில் அடுத்தாண்டு ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் விதி 110இன் கீழ் முதல்வர் பேசியது:
“தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதன்மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.”
கரோனா பேரிடரால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது ஏப்ரல் 2020 முதல் உயர்த்தப்படாமல் இருந்தது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17லிருந்து 28 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய நிதியமைச்சர் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.