நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பத்திரிகையாளா்களுக்கு நலவாரியம்-விருது: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

பத்திரிகையாளா்களுக்கு நல வாரியம் மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் விருது அளிக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 8:10 pm

DIN

பத்திரிகையாளா்களுக்கு நல வாரியம் மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் விருது அளிக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா்.

செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

உழைக்கும் பத்திரிகையாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த பத்திரிகையாளா்கள் நல வாரியம் அமைக்கப்படும். இயற்கை எய்தும் பத்திரிகையாளா்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் குடும்ப உதவி நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்படும்.

பத்திரிகையாளா்களின் பணிகளை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்கப்படும்.

இளம் பத்திரிகையாளா்கள் இதழியல் துறையில் உயா் கல்வி படிக்கவும், பயிற்சி பெறவும் நிதியுதவி அளிக்கப்படும். சிறந்த இதழியலாளருக்கு கலைஞா் எழுதுகோல் விருது அளிக்கப்படும். இந்த விருது ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது என அமைச்சா் சாமிநாதன் அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.