தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தமிழகத்தில் கரோனா அதிகரிப்பு: புதிதாக 1,587 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,587 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 18 பேர் பலியாகினர்.

News image
தமிழகத்தில் கரோனா அதிகரிப்பு: புதிதாக 1,587 பேருக்கு பாதிப்பு
Updated On :8 செப்டம்பர் 2021, 2:43 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,587 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 18 பேர் பலியாகினர்.

கடந்த இரு நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இன்று அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தில் நேற்று 1,544 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,587 பேராக உயர்ந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன் கிழமை (செப்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,587 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,27,365-ஆக உயர்ந்துள்ளது.

இன்று பலி எண்ணிக்கை 18-ஆக குறைந்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,073-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,594 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,76,112-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும்  1,59,772பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.