எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அருப்புக்கோட்டை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக புதன்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.நா.முஸ்லிம் முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்டத் தலைவர் ஷேக் அப்துல்லா, செயலாளர் ஆபிதீன் உள்ளிட்டோர்.
Updated On :9 செப்டம்பர் 2021, 3:17 am

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக புதன்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் ஷேக் அப்துல்லா தலைமை வகித்தார்.

மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுல்தான் ஆபிதீன், மாவட்டப் பொருளாளர் அப்துல்லா அன்வர், மாநில துணைச்செயலாளர் காதர் பாட்ஷா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மத்தியில் சுல்தான் ஆபிதீன் உரையாற்றியதாவது, டெல்லி பெண் காவலர் சபியாவை சமூக விரோதிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தை  மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றம் செய்த நபர்களைக் கண்டறிந்து கைது செய்திட மத்திய அரசும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் பேசினார்.

அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்டோர் கண்டன முழக்கம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணைச்செயலாளர் அல்பீக்கா உள்ளிட்ட 200க்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேரில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.