திருமண விழாவில் சோகம்; மின்சாரம் தாக்கி சமையற்கலைஞர் மரணம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவுக்கு பூதலூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (29) என்பவர் சமையல் பணிக்கு வந்துள்ளார்.


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவுக்கு பூதலூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (29) என்பவர் சமையல் பணிக்கு வந்துள்ளார்.
வியாழக்கிழமை காலை உணவுக்குப் பிறகு மின்விசிறியைப் போடுவதற்காக சென்ற அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதையடுத்து அந்த இடத்திலேயே தர்மராஜ் உயிரிழந்தார். உடற்கூராய்வுக்காக அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கீரனூர் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...