சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளை நீலகிரி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Updated On :11 செப்டம்பர் 2021, 7:58 am

DIN

தமிழகத்தில் நாளை நீலகிரி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா, சத்தீஸ்கர் நோக்கி நகர்ந்து செல்லும்.

தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கோவை, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், ஈரோடு திருவள்ளூர், ராணிப்பேட்டை செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

செப். 12ல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கோவை, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டியுள்ள உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.