எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்தத் தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2021-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் செப்டம்பா் 12-ஆம் தேதி கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.