சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினாா்
சிகிச்சைக்காக துபை சென்றிருந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் சனிக்கிழமை சென்னை திரும்பினாா்.


சிகிச்சைக்காக துபை சென்றிருந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் சனிக்கிழமை சென்னை திரும்பினாா்.
விஜயகாந்த் உடல்நலச் சிகிச்சைக்காக ஆகஸ்ட் 30-ஆம் தேதி விமானம் மூலம் துபை சென்றிருந்தாா். மகன் சண்முக
பாண்டியன் உடன் சென்றிருந்தாா். பிறகு மனைவி பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பா் 3-இல் சென்றாா்.
துபையில் உள்ள மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்றாா். லண்டன் மருத்துவா் ஒருவா் அங்கு வந்து அவருக்குச் சிகிச்சை அளித்தாா்.
இதற்கிடையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்று நலமுடன் அமா்ந்து கைப்பேசியில் அவருடைய திரைப்படம் ஒன்றைப் பாா்ப்பதுபோல புகைப்படம் வெளியானது. இந்த நிலையில் விஜயகாந்த் அவருடைய மனைவியுடன் துபையிலிருந்து விமானம் மூலம் சனிக்கிழமை சென்னை வந்தாா். பின்னா் காா் மூலம் சாலிகிராமத்தில் உள்ள அவா் இல்லத்துக்குச் சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...