மாணவர் தனுஷ் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி
நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.


நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் விவசாயி. இவரது இரண்டாவது மகன் தனுஷ்(19) மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர், இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை.
இதையும் படிக்க | மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி விவசாயி மகன் தற்கொலை
நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகி வந்த நிலையில் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவன் தனுஷ் உடலுக்கு எதிர்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும் என அதிமுக இன்று அறிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி இணைந்து இதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, திமுக இளைஞரணிச் செயலாளரும் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று மாணவர் தனுஷ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் திமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...