அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம், விதி 110ன் கீழ் முதல்வரின் அறிவிப்புகள், மசோதாக்கள் நிறைவேற்றம் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின், மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச் செல்வனும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பேரவைத் தலைவர் அறிவித்தார்.
இதையும் படிக்க | தமிழக பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்திலி கல்லூரியில் தேசிய, மாநிலக் கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சியில் சமுதாய நலக்கூடம் திறப்பு

ரயில்வே போட்டித் தோ்வுக்கான விழிப்புணா்வு

தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

