தமிழக பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.


நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.
நீட் தேர்வின் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை அடிப்படையில் பேரவையில் இன்று காலை மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவின் மீதான் விவாதம் இன்று பிற்பகலில் நடைபெற்றது. அப்போது மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
இதற்கிடையே, நீட் தேர்வால் பல நன்மைகள் இருப்பதாக பேசிய பாஜகவின் நயினார் நாகேந்திரன், கூட்டணி கட்சிகளுக்கும், எங்களுக்கும் வெவ்வேறு கருத்துகள் இருப்பதாக கூறி பேரவையிலிருந்து வெளியேறினர்.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...