மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என். ராஜேஷ்குமார் அகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே காலியாக இருந்த ஒரு மாநிலங்களவை இடத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக சாா்பில் போட்டியிட்ட எம்.எம்.அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வானார்.
இதையடுத்து தமிழகத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக எம்.பி.க்களாக இருந்த வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோரின் ராஜிநாமாவைத் தொடர்ந்து இரண்டு இடங்கள் காலியாகவுள்ளன.
காலியாகவுள்ள இந்த இரண்டு மாநிலங்களவை பதவிகளுக்கும் அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...