எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வேதாரண்யத்தில் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் கெளரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஊதியம் வழங்கக்கோரி இன்று (செப்.16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
வேதாரண்யம் அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  கெளரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள்.
Updated On :16 செப்டம்பர் 2021, 9:17 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் கெளரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஊதியம் வழங்கக்கோரி இன்று (செப்.16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்ட மாதிரி கல்லூரி, கடந்த ஆண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்படுகிறது.

நிர்வாக மாற்றத்துக்குப் பின்னர் பராமரிப்பு உள்ளிட்ட செலவின தேவைகளுக்கான தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, ஊதியம் உள்ளிட்ட நிலுவைத்தொகை போன்றவைகளை வழங்கவும், நிர்வாக செலவினங்களை ஏற்கவும் கோரி கௌரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.