டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :17 செப்டம்பர் 2021, 6:49 am

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நாடு முழுவதும் பாஜகவினர் பிரதமர் மோடியின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். 

பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.