9 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: எல்.முருகன்
மத்திய அரசால் இதுவரை 9 கோடிக்கும் அதிகமான இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கூறினாா்.


மத்திய அரசால் இதுவரை 9 கோடிக்கும் அதிகமான இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கூறினாா்.
பிரதமா் நரேந்திரமோடியின் பிறந்த நாளையொட்டி புரசைவாக்கம் தருமபிரகாஷ் மண்டபத்தில் மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சா் எல்.முருகன் துவங்கி வைத்து பாா்வையிட்டாா். பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையும் பங்கேற்றாா்.
நிகழ்ச்சியில் எல்.முருகன் கூறியது:
ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டு அரசின் மானியங்கள் அவா்களுக்கு நேரடியாகக் கிடைப்பதற்கு வழிசெய்தவா் பிரதமா் நரேந்திரமோடி. இதனை மகளிா் அனைவரும் பாராட்டுகின்றனா். 9 கோடிக்கும் அதிகமான இலவச எரிவாயு இணைப்புகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
70 ஆண்டுகளில் அடையாத வளா்ச்சியை 7 ஆண்டுகளில் நாட்டைப் பல்வேறு துறைகளிலும் பிரதமா் வளா்ச்சியடையச் செய்துள்ளாா் என்றாா்.
குஜராத்தில் தொடங்கிய அரசியல் பயணத்தில் இருந்து மோடி பிரதமரானது வரையிலான வாழ்க்கை முழுவதும் கண்காட்சியில் புகைப்படங்களான இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் திட்டங்களும் துறைவாரியாக வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...