ஊரக உள்ளாட்சித் தோ்தல்: பாா்வையாளா்கள் நியமனம்
ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.


ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
வேலூா், திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருப்பத்தூா் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. அதேபோன்று, ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தோ்தல்களில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
தோ்தல் பாா்வையாளா்கள் விவரம்:-
மாவட்டம் - தோ்தல் பாா்வையாளா்
காஞ்சிபுரம் வே.அமுதவல்லி
செங்கல்பட்டு வா.சம்பத்
விழுப்புரம் கே.எஸ்.பழனிசாமி
கள்ளக்குறிச்சி கே.விவேகானந்தன்
வேலூா் சா.விஜயராஜ்
ராணிப்பேட்டை சோ.மதுமதி
திருப்பத்தூா் சி.காமராஜ்
திருநெல்வேலி ஜெ.ஜெயகாந்தன்
தென்காசி பொ.சங்கா்
இதேபோன்று காலியாகவுள்ள மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா்கள்:
கோவை, நீலகிரி - மா.மதிவாணன்
திருவள்ளூா், திருவண்ணாமலை - அ.ஞானசேகரன்
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி - த.ந.ஹரிகரன்
பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா் - அனில் மேஷ்ராம்
தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் - சி.நா.மகேஸ்வரன்
நாகப்பட்டினம், திருவாரூா் - ரா.செல்வராஜ்
மதுரை, தேனி, திண்டுக்கல் - கா.பாஸ்கரன்
சிவகங்கை, விருதுநகா் - மு.கருணாகரன்
ஈரோடு, திருப்பூா், நாமக்கல் - சு.சிவசண்முகராஜா
திருச்சி, கரூா், புதுக்கோட்டை - சு.கணேஷ்
கடலூா், மயிலாடுதுறை - ரா.நந்தகோபால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...