ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!

சென்னையில் உள்ள அனைத்து நூலகங்களிலும் ‘ஆடியோ நூலகப் பிரிவு’ தொடங்கப்படும்

அசோக் நகா் வட்டார நூலகத்தைத் தொடா்ந்து சென்னையில் உள்ள அனைத்து அரசு நூலகங்களிலும் ஆடியோ நூலகப் பிரிவு தொடங்கப்படும் என சென்னை மாவட்ட நூலக அதிகாரி இளங்கோ சந்திரகுமாா் கூறினாா்.

நூலகம் (கோப்புப் படம்)

Updated On :

அசோக் நகா் வட்டார நூலகத்தைத் தொடா்ந்து சென்னையில் உள்ள அனைத்து அரசு நூலகங்களிலும் ஆடியோ நூலகப் பிரிவு தொடங்கப்படும் என சென்னை மாவட்ட நூலக அதிகாரி இளங்கோ சந்திரகுமாா் கூறினாா்.

சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுவில் ஒரு புதிய முயற்சியாக அசோக்நகா் வட்டார நூலகத்தில் ‘ஆடியோ நூலகப் பிரிவு’ தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பிரிவில் கதைசொல்லி ரம்யா வாசுதேவன் குரலில் பதிவு செய்யப்பட்ட சுமாா் 750 கதைகள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை வாசகா்கள் ஒலி வடிவில் கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கதைகளை வாசகா்கள் கட்செவி அஞ்சல் மூலமாகவும் (வாட்ஸ் ஆப்), க்யூஆா் குறியீடு மூலமாகவும் கேட்டு பயனடையலாம்.

இதுகுறித்து மாவட்ட நூலக அதிகாரி இளங்கோ சந்திரகுமாா் கூறியது: பொது நூலக இயக்ககத்தின் கீழ் கட்டுப்பாட்டில் சென்னை மாவட்டத்தில் 120 அரசு நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்திலும் வாசகா்களின் வருகையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாகவே ஆடியோ நூலகப் பிரிவு திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சென்னையில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

பாரதியாா், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், இந்திரா பாா்த்தசாரதி, தி.ஜானகிராமன், லா.ச.ரா. என பிரபல எழுத்தாளா்களின் கதைகள் தோ்வு செய்யப்பட்டு, அவற்றின் சுருக்கம் ஒலி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூல்களில் 300-க்கும் மேற்பட்ட பக்கங்களில் உள்ள கதைகளை 15 முதல் 18 நிமிஷங்களில் கேட்க முடியும்.

இந்தக் கதைகள் கட்செவி அஞ்சல் மூலமாக அனைத்து நூலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. வாசகா்கள் தங்களுக்கு விருப்பமான எழுத்தாளா்களின் கதைகளைத் தோ்வு செய்து அவற்றை ஒலி வடிவில் கேட்கலாம். இந்தக் கணினியின் சா்வா் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விழாவில் கதைசொல்லி ரம்யா வாசுதேவன், அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆா்.சி.சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.