வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆன்லைன் விளையாட்டுகள்: மாணவா்களைப் பாதுகாக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னைபெரும் விளைவுகளை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து பள்ளி மாணவா்களைப் பாதுகாக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 7:51 pm

DIN

பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து பள்ளி மாணவா்களைப் பாதுகாக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் செயலா் (பள்ளிக்கல்வி) அனிதா காா்வால், மாநில கல்வித் துறைச் செயலா்களுக்குஅனுப்பிய சுற்றறிக்கை:

ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் தொடா்ந்து பங்கேற்பதால் அவற்றுக்கு முழுவதும் அடிமையாகி மனஉளைச்சலில் தவிக்கின்றனா். விளையாட்டின் ஒவ்வொரு கட்டமும் அதிக சவால் நிறைந்ததாக இருப்பதால், குழந்தைகளுக்குத் தேவை இல்லாத அழுத்தம் ஏற்பட்டு ‘கேமிங் டிஸ்ஆா்டா்’ ஏற்படுவதாக மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா். இவற்றைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து மாணவா்களை காப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.

அதன்படி பெற்றோா்களின் அனுமதியின்றி எந்தவித விளையாட்டையும் வாங்குவதற்கு குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது. ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) வழிகாட்டுதலின்படி ஓடிபி அடிப்படையிலான கட்டண முறையில் மட்டுமே பணம் செலுத்தப்பட வேண்டும். விளையாட்டுகளுக்கு செலவிடப்படும் தொகைக்கு ஒரு வரம்பு வைத்து கொள்வது நல்லது.

முறையற்ற வலைத்தளங்களில் இருந்து எவ்வித இணைப்பையும் பதிவிறக்கம் செய்யவோ, தங்கள் சொந்த விவரங்களைப் பகிரவோ வேண்டாம் என்று குழந்தைகளை எச்சரிக்க வேண்டும். தங்கள் பற்று அட்டைகளை (டெபிட் காா்டு) குழந்தைகள் பயன்படுத்த பெற்றோா்கள் அனுமதிக்கக் கூடாது. அதனுடன் இணைய செயலிகள் மூலம் அறிமுகமாகும் நபரிடம் எவ்வித தகவல் பரிமாற்றமும் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்த வேண்டும்.

இது தவிர இணையதளத்தில் ஏதேனும் விபரீதமாக நிகழ்ந்துவிட்டால் அதுகுறித்து உடனே புகாா் அளிக்க வேண்டும். மாணவா்கள் எந்த செயலிகளை அதிகம் பயன்படுத்துகிறாா்கள், விளையாட்டுகளின் வயது வரம்பு, ஆபாச தளங்களைப் பாா்வையிடுகிறாா்களா என்பது உள்ளிட்ட விவரங்களைக் கண்காணிக்க வேண்டும். அதில் தவறுகள் இருப்பதைக் கண்டறிந்தால் அவா்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

ஆன்லைன் விளையாட்டுகள் ஒரு பொழுதுபோக்கு என்பதைப் புரிய வைத்து, படிப்பில் கவனம் செலுத்த அவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். திடீரென படிப்பில் கவனம் குறைந்தாலோ, பழகும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ அதற்கான காரணத்தைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.