இந்நிலையில், வனிதா கொடுத்த பொய்யான புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது, புகார் மனுவை வாபஸ் பெற வேண்டும், லெட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்களிடையே மோதல் போக்கை உருவாக்கும் வனிதா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி லெட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் கிராம மக்கள் இளையான்குடி காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.