அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உள்ளாட்சித் தேர்தல்: ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கட்டுப்பாடுகள் வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடுகளை மாநில தேர்தக் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

News image
தமிழக தேர்தல் ஆணையம்
Updated On :27 செப்டம்பர் 2021, 11:06 am

DIN

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடுகளை மாநில தேர்தக் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

வேலூா், திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூா் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

அதேபோன்று, ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான பிரசாரத்தின் போது ஒலிபெருக்கிகள் பயன்படுத்த, சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும், தேர்தல் நடத்தை விதிகளின்படி தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கிகள் போன்றவற்றை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும், முறைப்படுத்தவும், சுவரொட்டிகள், சின்னம், பதாகைகள், கொடிகள் ஒட்டுவது தொடர்பாகவும் பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

1. தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடைபெறும் நாள் வரை, தேர்தல் பிரசாரங்களுக்காக எந்தவிருவகை வாகனங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது.

2. பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த காவல்துறை அனுமதி பெறவேண்டும்.

3. எந்த ஒரு அரசு கட்டடம் அல்லது வளாகத்திலும் சுவர் எழுத்துக்கள், சுவரொட்டிகள், கட்-அவுட்கள், விளம்பரப் பலகைகள், கொடிகள் முதலியவற்றை வைத்தல் அல்லது காட்சிப்படுத்த ஆகியவை அனுமதிக்கக்கூடாது.

4. தனியார் கட்டடங்களில் உரிமையாளர்கள் அனுமதியிருந்தாலும், சுவரில் எழுதுவதோ, சுவரொட்டி போன்றவற்றை ஒட்டுவதோ கூடாது.

மேலும், விதிமுறைகளை மீறினால் அனைத்து ஒலிபெருக்கிகளும், தொடர்புடைய பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியமைக்கு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.