ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி குற்றவாளி - நீதிமன்றம்
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1991 - 96ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அப்போது, அவரது கணவர் பாபு நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளைக்கு ரூ.15.45 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையில் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று கூறி, ஊழல் வழக்குத் தொடரப்பட்டது.
இதையும் படிக்கலாமே.. 51 சக்தி பீடங்களின் மகத்துவம் (முழு விவரங்களுடன்) - நவராத்திரி ஸ்பெஷல்!
இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில், வெங்கடகிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டார்.
குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருப்போருக்கான தண்டனை விவரங்கள் விரைவில் வெளியிடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...