மதுக்கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

மதுக்கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
Published on

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மதுக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20 முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

இந்நிலையில் மதுக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், மதுக்கடைகளின் செயல்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, மதுக்கடைகளில் கூட்ட நெரிசல் இருக்கக்கூடாது. வரிசையில் நின்று வாங்க வேண்டும். 

ஒருவருக்கொருவர் குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

கடைப் பணியாளர்கள் மூன்றடுக்கு முகக்கவசம், கையுறைகள் பயன்படுத்த வேண்டும்.

மதுக்கடையை நாள் ஒன்றுக்கு இருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் 6 அடி சமூக இடைவெளியில் நிற்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். 

முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும்

மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது.

ஒரேநேரத்தில் கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் அனுமதியில்லை. 

மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com