
தமிழகத்தில் புதிதாக 1,538 பேருக்கு கரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் இதுவரை 4.20 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 26 லட்சத்து 11,837 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 209 பேருக்கும், சென்னையில் 189 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 1,753 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.
இதையும் படிக்க- காபூலில் மீண்டும் தாக்குதல்? சர்வதேச ஊடகங்கள் சொல்வது என்ன?
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 59,637-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 17,322 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 22 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,878-ஆக அதிகரித்துள்ளது.