காபூலில் மீண்டும் தாக்குதல்? சர்வதேச ஊடகங்கள் சொல்வது என்ன?

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வெடிச் சத்தம் கேட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வெடிச் சத்தம் கேட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

சமூக ஊடகப் பதிவுகளில் முதற்கட்டமாக ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் பகிரப்பட்டன.

இதுபற்றி ராய்டர்ஸ் தெரிவித்தது:

"காபூல் விமான நிலையத்தின் வடக்குப் பகுதியிலுள்ள வீட்டை ராக்கெட் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்த இருவர் தெரிவிக்கின்றனர். எனினும், இது உடனடியாக உறுதி செய்யப்படவில்லை."

அசோசியேடட் பிரெஸ்:

"காபூல் விமான நிலையத்தின் வடக்கு-தெற்குப் பகுதியில் ராக்கெட் தாக்கியதில் ஒரு குழந்தை உயிரிழந்ததாக ஆப்கன் காவல் துறைத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com