நெல்லை பள்ளி விபத்துக்கு நிர்வாகத்தின் அஜாக்கிரதையே காரணம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து இம்மாத இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தரமற்ற கட்டடங்கள் இடிக்கப்படும்பட்சத்தில், பள்ளிகள் நடத்த இடம் இல்லாத நிலையில், வாடகைக்கு இடம் தேர்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 3 ஆம் தேதி முதல் சுழற்சி முறையின்றி பள்ளிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.