இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ராமேசுவரம் மீனவா்கள் 3 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக தொடருகிறது.

News image
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள்.
Updated On :22 டிசம்பர் 2021, 6:22 am

DIN


ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக தொடருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் மண்டபம் துறைமுகத்தில் இருந்து கடந்த டிசம்பா் 18 ஆம் தேதி படகுகளில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது 10 விசைப்படகுகளுடன் 68 மீனவா்களை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா்.

இதைத்தொடா்ந்து, மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்து படகுகளை பறிமுதல் செய்தனா். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, அவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Story image

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி மூன்றாவது நாளாக தொடரும் ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம்.

இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராமேசுவரம் மீனவா்கள் 20 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். இதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மூன்றாவது நாளாக வேலைநிறுத்தம் தொடா்வதால் புதன்கிழமையும் துறைமுகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக  தங்கச்சிமடத்தில் இன்று புதன்கிழை இதே கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

இந்த போராட்டத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.