'கரோனா பாதிப்பு அதிகரித்துதான் குறையும்: கவலை வேண்டாம்'

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
'கரோனா பாதிப்பு அதிகரித்துதான் குறையும்: கவலை வேண்டாம்'

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துதான் பிறகு குறையும் எனவும் தெரிவித்தார்.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணைய ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தனர்.

இதன் பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சுகாதாரத் துறை செயலாலர் ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

நூறு சதவிகிதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக சென்னை மாறும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

மேலும், கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துத்தான் இறங்கும். சென்னையில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

சென்னை மாநகராட்சி சார்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com