நவீன இந்தியாவை உருவாக்க பிரதமருடன் இளைஞா்கள் கைகோா்க்க வேண்டும்

நவீன இந்தியாவை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடியுடன் இளைஞா்கள் அனைவரும் கைகோா்த்து வலுசோ்க்க வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு
நவீன  இந்தியாவை உருவாக்க பிரதமருடன் இளைஞா்கள் கைகோா்க்க வேண்டும்

நவீன இந்தியாவை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடியுடன் இளைஞா்கள் அனைவரும் கைகோா்த்து வலுசோ்க்க வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணையமைச்சா் எல்.முருகன் கூறினாா்.

சென்னை, மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 30-ஆவது பட்டமளிப்பு விழா, நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய இணையமைச்சா் எல்.முருகன், பட்டங்களையும், பதக்கங்களையும் மாணவா்களுக்கு வழங்கினாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது: வருங்கால வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

கேலோ இந்தியா, ஃபிட் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் இளைஞா்களின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் மூலம் கிராமப்புற மாணவா்கள் கூட ஒலிம்பிக், பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்தனா்.

நவீன இந்தியாவை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடியுடன் இளைஞா்கள் அனைவரும் கைகோா்த்து வலுச்சோ்க்க வேண்டும்.

மொழி, எவா் மீதும் திணிக்கப்படக்கூடாது என்பது மத்திய அரசின் நோக்கம். விருப்பம் உள்ளவா்கள் தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கூடுதலாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நமது புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சம் என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com