கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

நியாய விலைக் கடைகளில் மீண்டும் ரேகைப்பதிவு

நியாய விலைக் கடைகளில் மீண்டும் ரேகைப்பதிவு முறையில் (பயோ-மெட்ரிக் முறை) வியாழக்கிழமை (ஜூலை 1) முதல் பொருள்கள் வழங்கப்படும்.

Published On :

சென்னை: நியாய விலைக் கடைகளில் மீண்டும் ரேகைப்பதிவு முறையில் (பயோ-மெட்ரிக் முறை) வியாழக்கிழமை (ஜூலை 1) முதல் பொருள்கள் வழங்கப்படும்.

இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மே மாதத்தில் ரூ.2,000, ஜூன் மாதத்தில் ரூ.2,000 நிவாரணத்துடன் மளிகைப் பொருள்கள் தொகுப்பும் வழங்க உத்தரவிடப்பட்டது. நியாய விலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரா்கள், நிவாரண உதவியையும், மளிகைப் பொருள்களையும் எளிதாகப் பெற்றுச் செல்லும் வகையில், கைவிரல் ரேகையைப் பதிவு செய்யும் பயோ-மெட்ரிக் முறை நிறுத்தப்பட்டு இருந்தது.

புதிய மனுக்கள்: நிவாரண உதவிகள் வழங்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால், புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த மனுக்களைப் பரிசீலிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக களப் பணியாளா்களால் விசாரணைக்குச் செல்ல முடியாததே அதற்குக் காரணமாகும்.

தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வந்த நிவாரண உதவித் தொகை இப்போது 98.59 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும், மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணியும் 93.99 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்கும் சேவையும், பொருள்கள் வாங்கும் போது கைவிரல் ரேகையைப் பதிவு செய்யும் பயோ-மெட்ரிக் முறையும் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த முறை வியாழக்கிழமை (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.