கரோனா அபாயம்: சென்னையில் மீண்டும் வருகிறது கட்டுப்பாடுகள்

கேரளத்தைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் கரோனா தொற்று குறையும் வேகம் நின்று, தற்போது நாள்தோறும் புதிய பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
கரோனா அபாயம்: சென்னையில் மீண்டும் வருகிறது கட்டுப்பாடுகள்
கரோனா அபாயம்: சென்னையில் மீண்டும் வருகிறது கட்டுப்பாடுகள்

கேரளத்தைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் கரோனா தொற்று குறையும் வேகம் நின்று, தற்போது நாள்தோறும் புதிய பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

இது அவ்வளவு நல்ல சூழ்நிலை இல்லை என்பதால், மீண்டும் சென்னையில் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தை மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில், ஆக.9-ஆம் தேதி வரை அங்காடிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் மற்றும் சந்தை பகுதிகளில் கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது தொடா்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி, காவல் ஆணையா் சங்கா் ஜிவால் ஆகியோா் தலைமையில் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பஜாா் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாா் , என்எஸ்சி போஸ் சாலை, குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் சந்தை பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டா் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை, அமைந்தகரை சந்தை பகுதியில் அமைந்தகரை காவல் உதவி மையம் முதல், புல்லா நிழற்சாலை திருவிக நகா் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் சந்தை பகுதியில் ஆஞ்சநேயா் சிலை முதல் அம்பேத்கா் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள், சனிக்கிழமை முதல் ஆக.9-ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை.

கொத்தவால் சாவடி சந்தை ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) முதல் ஆக.9-ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை என வணிகா் சங்கப் பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், வணிகா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மக்களும், சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளைத் தவிர்க்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் வேண்டியது இன்றியமையாதது.

முதல் அலை, இரண்டாம் அலை என அலைகள் ஓயாமல் தாக்கினால், மக்கள் மட்டுமல்ல, பொருளாதாரமும் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்பதால், இப்போதே விழித்துக் கொண்டு, அனைத்துத் தேவைகளையும் அருகிலிருக்கும் சிறிய கடைகளில் வாங்கிக் கொள்வதே சாலச்சிறந்தது என்று மாநகராட்சியும் வலியுறுத்துகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com