தமிழகத்தில் ஒரே நாளில் 836 பேருக்கு கரோனா

தமிழகத்தில் ஏறத்தாழ இரண்டு மாதத்துக்குப் பிறகு மீண்டும் தினசரி கரோனா பாதிப்பு 800-ஐக் கடந்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 836 பேருக்கு கரோனா
தமிழகத்தில் ஒரே நாளில் 836 பேருக்கு கரோனா

சென்னை: தமிழகத்தில் ஏறத்தாழ இரண்டு மாதத்துக்குப் பிறகு மீண்டும் தினசரி கரோனா பாதிப்பு 800-ஐக் கடந்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை 836 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 317 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

நோய்த் தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காததும், மக்களின் அலட்சியப் போக்குமே இதற்கு காரணம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதே நிலை தொடா்ந்தால் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனா்.

மாநிலத்தில் இதுவரை 1.83 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 8,60,562 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 553 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,42,862-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 5,149 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 4 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,551-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com