
மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்கு 30% மானியம்: தமிழக அரசு
ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 30 சதவிகித மூலதன மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆக்ஸிஜன் உற்பத்தி முதலீட்டாளர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி ஒற்றை சாளர முறையில் விரைந்து அனுமதி வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி முன்னுரிமை அடிப்படையில் சிப்காட், சிட்கோ மூலம் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மூலதன சலுகையைப் பெற ஆக்ஸ்ட் 15-ம் தேதிக்குள் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.