புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மீன்பிடித் தடைக்கால நிவாரணம் இனி ரூ.6,000

மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News image
மீன்பிடித் தடைக்கால நிவாரணம் இனி ரூ.6,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது
Updated On :1 நவம்பர் 2021, 12:15 pm

DIN


மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முன்பு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஆயிரம் ரூபாய் உயர்த்தி ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  தேர்தல் வாக்குறுதியின்படி நடப்பாண்டு முதல் குடும்பம் ஒன்றுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும்.

தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.80 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு ரூ.108 கோடி நிவாரணத் தொகை தரப்படும். 

முதல்கட்டமாக 11 கடலோர மாவட்டங்களில் 1.24 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.