மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சென்னையிலிருந்து வெளியூர் செல்வோர் கவனத்திற்கு: ரயில் நேரங்கள் மாற்றம்

சென்னையில் தொடர்மழை காரணமாக சில ரயில்கள் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
சாலைகளை ஆக்கிரமித்துள்ள மழை நீர்
Updated On :7 நவம்பர் 2021, 3:21 pm

DIN


சென்னையில் தொடர்மழை காரணமாக சில ரயில்கள் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால், சில ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  • சென்னை சென்ட்ரலிலிருந்து புதுதில்லி வரை செல்லும் சிறப்பு விரைவு ரயில் (02615) 07.11.2021 மாலை 6.50 மணிக்கு புறப்படவிருந்தது. அது 2 மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமாக இரவு 9.30-க்கு புறப்படுகிறது.
     
  • சென்னை சென்ட்ரலிலிருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் விரைவு ரயில் (02671) 07.11.21 இரவு 9.05 மணிக்குப் புறப்படவிருந்தது. அது 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக 22.15 மணிக்குப் புறப்படவுள்ளது.
     
  • சென்னை சென்ட்ரலிலிருந்து ஆழப்புழா செல்லும் சிறப்பு விரைவு ரயில் (02639) 07.11.21 இரவு 8.55 மணிக்குப் புறப்படக் காத்திருந்தது. அது தற்போது 3 மணி நேரம் 35 நிமிடங்கள் தாமதமாக 08.11.2021 நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.