சட்டப்பேரவைத் தேர்தலைப் போல ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக். 6, 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதையடுத்து பல்வேறு கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. கட்சிகளின் தலைவர்கள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சட்டப்பேரவைத் தேர்தலைப் போல ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்ய வைத்தீர்கள். அதன்படி கடந்த மே 7 ஆம் தேதி முதல்வராக நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். பொறுப்பேற்றது முதல் இன்றுவரை உங்களுக்கு உழைத்துக் கொண்டிருக்கிறேன். தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம்.
அதுபோல ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் நல்லாட்சி மலர திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். எங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
இந்தியாவின் முதல் டிஜிட்டல் சுங்கச் சாவடி: நெடுஞ்சாலை உள்கட்டமைப்பில் ஒரு மைல்கல்!

ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
எஸ்டிஆர் - 51 படப்பிடிப்பு அப்டேட்!
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

