தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா: எம்ஜிஆர் நினைவில்லத்தில் கல்வெட்டு

​அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவில்லத்தில் வி.கே. சசிகலா அதிமுக கொடியேற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News image

கோப்புப்படம்

Updated On :17 அக்டோபர் 2021, 5:11 am

DIN


அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவில்லத்தில் சசிகலா அதிமுக கொடியேற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50-ம் ஆண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பிரமாண்ட மாநாடு நடத்தவும், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரில் விருதுகள் வழங்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவில்லத்தில் சசிகலா அதிமுக கொடியேற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நினைவில்லத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று (சனிக்கிழமை) அஞ்சலி செலுத்திய சசிகலா, மனதில் இருந்த பாரத்தை இறக்கிவைத்து விட்டதாகப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.