தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் இன்று முதல்வா் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On :30 அக்டோபர் 2021, 7:13 am

DIN

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் இன்று முதல்வா் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, இன்று காலை முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரையிலிருந்து காா் மூலம் பசும்பொன் வருகை தந்தார். தொடர்ந்து பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு, தமிழக அரசு சாா்பில் மலா் வளையம் வைத்து முதல்வர் மரியாதை செலுத்தினார். 

முதல்வருடன், அமைச்சா்கள் ஐ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்எல்ஏக்கள் உடன் வந்திருந்தனர். முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, கமுதி, பாா்த்திபனூா், அபிராமம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீஸாா் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 

முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கும் முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.