உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தமிழக தேர்தல் ஆணையம்
தமிழக தேர்தல் ஆணையம்


தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதியும் நடைபெறவுள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம்.

மொத்தம் 14,573 வாக்குச்சாவடிகளில் 27,000 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

அக்டோபர் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல்:

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றிய குழு துணைத்தலைவர் பதவிகளுக்கும் அக்டோபர் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கும் அக்டோபர் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

நேரடி தேர்தலில் வென்றவர்கள் அக்டோபர் 20-ம் தேதி பதவி ஏற்பார்கள். நேரடி தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் வாக்களிப்பார்கள்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com