Enable Javscript for better performance
ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்: கமல்ஹாசன்- Dinamani

சுடச்சுட

    ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்: கமல்ஹாசன்

    By DIN  |   Published on : 17th September 2021 06:06 PM  |   அ+அ அ-   |    |  

    Kamal haasan

    ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “1995இல் ஃபோர்டு நிறுவனத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஏராளமான தளர்வுகளும், வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளும் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன. 

    அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்து இருந்தாலும் தமிழக தொழில்துறை வரலாற்றில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மிக முக்கியமானது. அடுத்தடுத்து பல தொழிற்சாலைகள் தங்கள் தயாரிப்பை தமிழகத்தில் துவங்க இந்த ஒப்பந்தம் காரணமாக அமைந்தது. தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பலரின் இரவு பகலாக உழைப்பு இதன் பின்னால் இருந்தது. கமிஷன் சாம்ராஜ்யத்தால் இந்த கம்பெனிகள் அல்லது தங்களுக்கு வரவேண்டிய மதிப்புக் கூட்டுவரி பங்கினை வாங்குவதற்கு கூட தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டி இருந்தது தமிழகத்தில் ஊழல் மலிந்து காட்சிகளின் துயர வரலாறு.

    1996-ல் 1,500 கோடி முதலீட்டில் ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தன் தயாரிப்பைத் துவங்கியது. முதற்கட்டமாக சுமார் 2,100 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளித்தது. பின்னர் படிப்படியாக பல அடுக்குகளாக தொழிற்சாலையை விரிவாக்கம் செய்துகொண்டது. ஏறத்தாழ தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் அனைவருமே வெவ்வேறு காலகட்டங்களில் ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இன்று நேரடியாக சுமார் 4,000 தொழிலாளர்களுக்கும் மறைமுகமாக சுமார் 25,000 பேருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது ஃபோர்டு இந்தியா நிறுவனம். தொழில் விரிவாக்கம் என்பது இலாபம், எதிர்காலச் சந்தை தேவை ஆகியவற்றை மனதிற்கொண்டே நிகழும். 

    25 ஆண்டுகளுக்கு பின் எங்களுக்கு பலத்த நஷ்டம் நிறுவனத்தையும் விரைவில் மூட போகிறோம் என்று அறிவித்திருக்கிறது போர்டு நிறுவனம். நிர்வாகத்தின் இந்த திடீர் முடிவு நாளின் நிறுவனத்தின் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களும் அவரது குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயுள்ளனர். ஏற்கனவே வேலை இல்லா திண்டாட்டம், பொருளாதார இழப்புகள் என தமிழகம் தத்தளித்து வருகிறது. இத்தனை பேருக்கும் உடனடியாக மாற்று வாழ்வாதாரம் அளிக்க வழியில்லை. 

    இதையும் படிக்க- எடப்பாடி பழனிச்சாமியுடன் எல்.முருகன், அண்ணாமலை சந்திப்பு

    கடுமையாக முயற்சிகள் எடுத்து ஏராளமான சலுகைகளை அறிவித்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மக்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க தான். லாபம் வந்தால் எனக்கு; நஷ்டம் வந்தால் மூடி விட்டு ஓடிவிடுவோம் என்பது குறுகிய மனப் போக்கு . இது ஏற்புடையது அல்ல. இது நாள் வரை தமிழக அரசினால் அளிக்கப்பட்ட சலுகைகள், மானியங்கள், நீர் உள்ளிட்டவற்றிற்கு பொருளே இல்லாமல் ஆகிவிடும்.

    முதலீட்டை ஈர்ப்பதில் காட்டும் அக்கறையும் கவனமும் நிறுவனங்களினால் மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பலன் கிடைப்பதை உறுதி செய்வதிலும் காட்ட வேண்டும். தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நிறுவனத்தின் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp