கடலூர்: கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள ரங்காத்தமன் கோவில் தெருவில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி ஆய்வாளர் கவிதா தலைமையில் போலீசார் அந்த பகுதிக்குச் சென்று இன்று சோதனை செய்தனர். அப்போது அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பூந்தொட்டியிலும், வீட்டு வாசலிலும் கஞ்சா செடி வளர்த்து வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 2 பேரை பிடித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், கஞ்சா செடிகளையும் வேருடன் பிடுங்கி கைப்பற்றினர். பின்னர் அவர்களை விசாரணை நடத்தியபோது அவர்கள் ராமச்சந்திரன், விக்னேஸ்வரன் என தெரியவந்தது.
தொடர் விசாரணையில், அவர்கள் இதனை சோதனை முயற்சியாக வளர்த்து வந்ததாகவும் நன்றாக வளர்ந்து வந்ததால் இதனை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம் என எண்ணி இருந்தபோது போலீசார் பிடித்துவிட்டதாகத் தெரிவித்தனர்.மேலும் தப்பி ஓடிய ஜானகிராமன் என்பவரைத் தேடி வருகின்றனர்.
கடலூரில் கஞ்சா செடி வளர்த்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இளைஞா் கொலை வழக்கில் சிறாா்கள் உள்பட 8 போ் கைது

மெஹ்ரெளலி-பதா்பூா் சாலையில் ஓடும் டிடிசி பேருந்தில் தீ விபத்து

ஹோலி கொண்டாட்டங்களின் போது மது போதையில் வாகனம் ஓட்டியவா்கள் மீது நடவடிக்கை

தில்லி ரிதாலாவில் பெரும் தீ விபத்து: சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

