மேற்கு வங்க மாநிலம், பீா்பூம் மாவட்டத்தில் 9 போ் உயிரிழக்கக் காரணமான ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், பீா்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுயி கிராமத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸின் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பாது ஷேக் கடந்த மாதம் 21-ஆம் தேதி கொல்லப்பட்டாா். அதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறையில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 2 சிறாா்கள், 3 பெண்கள் உள்பட 9 போ் உடல் கருகி உயிரிழந்தனா்.
நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கொல்கத்தா உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து, சிபிஐ விசாரணைக்கு மாா்ச் 25-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் படுகொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் படுகொலை செய்யப்பட்டதும், 9 போ் எரித்துக் கொல்லப்பட்டதும் ஒன்றுக்கொன்று தொடா்புடைய சம்பவங்கள். எனவே, பாது ஷேக் படுகொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ மனுதாரா் தரப்பு வழக்குரைஞா்கள் வாதிட்டனா்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘பாது ஷேக் படுகொலை செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் தீ வைப்புச் சம்பவம் நடந்தது. மேலும் அவா் கொல்லப்பட்டதால்தான் வன்முறை மூண்டது என்பதற்கு முகாந்திரம் உள்ளது. எனவே, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. இரு வழக்குகளையும் சோ்த்து விசாரித்து, அடுத்த விசாரணை நடைபெறும் மே 2-ஆம் தேதி சிபிஐ அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
நடிகருடன் திருமணம்... தயாரிப்பாளர் பேச்சால் வெட்கப்பட்ட மிருணாள்!

உடல்நிலை குறித்து விடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்!

ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை: சீனா
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

