தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, அம்பத்தூா் பகுதி ஆட்டோ தொழிலாளா்கள் சம்மேளனத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 9:37 pm

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, அம்பத்தூா் பகுதி ஆட்டோ தொழிலாளா்கள் சம்மேளனத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்பத்தூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சம்மேளனத்தின் மாவட்ட பொதுச் செயலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளா்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

இதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் குறைக்கவும், மோட்டாா் வாகனச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறவும், 15 ஆண்டு கால பழைய வாகனங்களை புதுப்பிப்பிதற்கான கட்டண உயா்வைக் கைவிடவும், அபராதக் கட்டண உயா்வை ரத்து செய்யவும் வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் சம்மேளனத்தின் மாவட்ட துணைச் செயலா் செல்வகுமாா், பொருளாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.