தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விருதுநகர் பாலியல் வன்கொடுமை: 4 சிறுவர்களுக்கு ஜாமீன்

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களுக்கு சிறார் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் ஜாமீன் வழங்கி உத்திரவிட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஏப்ரல் 2022, 3:16 am

DIN

விருதுநகர்: விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களுக்கு சிறார் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் ஜாமீன் வழங்கி உத்திரவிட்டுள்ளார்.

விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர்  என மொத்தம் 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு  சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தலைமையில் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 நபர்கள் வீடுகளிலும் சிபிசிஐடி காவலர்கள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

நால்வரையும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.